தவிடுபொடியானா ஆமீர்கானின் திட்டம்!! வெளிவந்த உண்மைகள்!!

0
77
Tavidupotiana Aamir Khan's plan !! Revealed Facts !!
Tavidupotiana Aamir Khan's plan !! Revealed Facts !!

தவிடுபொடியானா ஆமீர்கானின் திட்டம்!! வெளிவந்த உண்மைகள்!!

இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் சரி வில்லனாக வந்தாலும் சரி இவரை ரசிபதற்கெனவவே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரின் நடிப்பிற்கு அடிமை என்றும் சொல்லலாம். மேலும் தற்போது பல இடங்களில் இவரின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.  நடிகர் மாதவன் இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தற்போது மாறா என்ற படத்தில் நடித்து அசத்தி உள்ளார்.

நடிகர் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி வாகை சூடிய படம் விக்ரம் வேதா. இந்தப்படம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை ஏற்ப்படுத்தியது. தற்போது அந்த படம் இந்தியில் ரீமேக் ஆகா இருக்கிறது. வேதாவாக ஹிரித்திக் ரோஷனும் விக்ரமாக சயீப் அலிகானும் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் முதலில் ஆமீர்கான் தான் வேதா கதாப்பாத்திரதில்  நடிப்பதாக இருந்தது. படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால் இந்தப்படத்தை பான் ஆசியா படமாக உருவாக்க நினைத்ததால், ஆமீர்கான்  இந்த கதையை ஹாங்காங் பின்னணியில் நடைபெறுவதாக மாற்ற சொன்னதால். அதற்கான திரைக்கதையும் மாற்றி எழுதப்பட்டது.

தற்போது கொரோனா தாக்கம் மற்றும் இந்தியா – சீனாவுக் இடையே உள்ள பிரச்சனை இரண்டும் சேர்ந்து ஆமீர்கானின் திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டது. அமீர்கானின் தங்கல் படம் சீன மொழியில் வெளியாகி மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. அதனால்  விக்ரம் வேதாவையும் அதே போல வெற்றியடைய வைக்கலாம் என்று நினைத்திருந்த ஆமீர்கானுக்கு அது நடக்காது என தெரிந்ததுமே இந்தப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என தெரிய வந்துள்ளது.

author avatar
CineDesk