ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் சிறு குழப்பமும் உண்டாகும் நாள்!!

0
120
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் சிறு குழப்பமும் உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் சிறு குழப்பமும் உண்டாகும் நாள். காலையில் சுபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் திடீர் பிரயாணம் ஒன்று உருவாகலாம் அதன் மூலம் மாலையில் மனதில் ஒரு குழப்பம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சிறுதூரப் பயணம் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீலநிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani