ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

0
148
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். இன்றைக்கு பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிடமாக சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதி காப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சிறிய பயணத்தை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உயரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani