ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அன்யூனியம் கூடும் நாள்!!

0
83

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அன்யூனியம் கூடும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் அன்யூனியம் கூடும் நாள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சந்தோஷ செய்தி ஒன்று வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் விருத்திகரமாக அமையும். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் அருமையாக நடைபெறுவதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் தரும் செய்திகள் கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் வியக்க வைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோஷமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani