ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
114
#image_title

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில செலவுகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani