Connect with us

Astrology

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

Published

on

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். பகை உணர் யோக ஸ்தானமாகிய ஆறாம் இடத்தில் சந்திர பகவான் இருப்பதால் நன்மைகளை பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெற்ற மகிழ்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

Advertisement

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றலை கண்டு சக ஊழியர்கள் பயந்து போவார்கள். மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். உங்கள் வேலைகளைப் பார்த்து மேலதிகாரிகள் பரிசளிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்தும் அற்புதமாக செயல்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை.

Advertisement

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவோடு காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Advertisement