ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! மனதில் சந்தோஷம் பொங்கும் நாள்!!

0
108
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! மனதில் சந்தோஷம் பொங்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் பொங்கும் நாள்.அயன சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் இருந்தாலும் சந்தோஷமாகவே இருக்கும்.

 

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

 

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani