சுவையான பன்னீர் பக்கோடா எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

0
75

சுவையான பன்னீர் பக்கோடா எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

பன்னீர் பக்கோடா தேவையான பொருட்கள்:

1.பன்னீர் 200 கிராம்
2.வெங்காயம்-2 மெல்லியதாக நறுக்கியது.
3.பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
4.இஞ்சி 1 துண்டு பொடியாக நறுக்கியது.
5.கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை பொடியாக நறுக்கியது.
6.உப்பு 1 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
8. கரம் மசாலா 1 தேக்கரண்டி.
9. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
10. பெருங்காயத் தூள் 1/4 தேக்கரண்டி
11. கடலை மாவு 1/2 கப்
12. அரிசி மாவு 2 மேசைக் கரண்டி
13. எண்ணெய் பொரிப்பதற்கு.

செய்முறை:

1. பன்னீரை துருவிக்கொள்ளவும்.
2. துருவிய பன்னீரில் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா ,கொத்தமல்லி இலை, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,உப்பு, பெருங்காயத்தூள் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
3. மேலும் இந்த மாவில் கடலைமாவு, அரிசிமாவு கலந்து பிசையவும்.
4. தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்.
5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
6. எண்ணை காய்ந்தவுடன் உருண்டையாக பக்கோடா மாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
7. பன்னீர் பக்கோடா தயார்.

இந்த ஊரடங்கு காலத்தில் உங்கள் வீட்டில் எளிமையான இந்த பன்னீர் பக்கோடா முறையை செய்து அசத்துங்கள்.

author avatar
Kowsalya