மதுபான கூடத்தை தனியாக பூட்டிய சிங்கப்பெண்; கதவை உடைத்து தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்..!!

0
80

மதுபான கூடத்தை தனியாக பூட்டிய சிங்கப்பெண்; கதவை உடைத்து தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்..!!

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மது விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்ட விதிமுறைகளை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்ப்பட்டு வருகிறது.

சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தின் எதிரே இருந்த ஒரு மதுபானக் கூடத்தில், மதுக்கடைக்கான விற்பனை நேரத்தை கடைபிடிக்காமல் அதிக நேரம் மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதைக் கண்ட தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருக்கும் கலைச்செல்வி என்பவர் அதிக நேரம் மது விற்பனை செய்த பட்டாபிராம் மதுக் கூடத்தினை தைரியமாக பூட்டை போட்டு பூட்டினார். பூட்டிய சாவியை மதுக்கடைக்கு எதிரே இருந்த பட்டாபிராம் காவல்நிலைய அதிகாரிகளிடம் சாவியை ஒப்படைத்தார்.

பின்னர், அரசு வழங்கிய குறிப்பிட்ட நேரத்தை விட, அதிக நேரம் மது விற்பனை செய்வதாக புகார் ஒன்றையும் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக காவல்நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பூட்டப்பட்ட மதுக் கூடத்தின் கதவை உடைத்துக் கொண்டு குடிமகன்கள் வெளியேறினர்.
இதுபோன்று பல்வேறு மதுக் கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யும் நேரத்தில் தனது செல்போன் மூலம் நேரடியாக கலைச்செல்வி வீடியோவில் பேசியுள்ளார்.

மதுக்கடைகள் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் எப்போதுமே மது விற்பனை செய்வதாகவும் இதான் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி தமது எதிர்கால வாழ்க்கையை இழக்கிறார்கள் என்றும், அரசு இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலைச்செல்வி கூறினார்.

author avatar
Jayachandiran