டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்!

0
121
Tasmac and changes to bars closing time at night? Wine lovers in shock!
Tasmac and changes to bars closing time at night? Wine lovers in shock!

டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்!

திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பொதுவாக தினந்தோறும் டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை இரவு பத்து மணிக்கு மூடப்படுகின்றது.அதன் காரணமாக மது வாங்கும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும்,சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகின்றது என கூறப்பட்டது.

இதுபோல பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் அதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.மேலும் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்  நீதிபதிகள் இது குறித்து பதில் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவிற்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் டாஸ்மாக் மதுக் கடைகள்,பார்கள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரம் என்பது முழுவதும் அரசின் கொள்கை முடிவு தான் அதனால் அதில் எங்களால் தலையிட முடியாது என கூறப்பட்டிருந்தது.அதுமட்டுமின்றி பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது பற்றி அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

author avatar
Parthipan K