60 மாவட்டங்களா! தமிழகத்தில்! அன்புமணி ராமதாஸ் MP கூறுவது என்ன?

0
82
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. அதை அடுத்து சட்டப்பேரவையில் பல விவாதங்கள் பல கோரிக்கைகள் முன்வைக்க பட்டன. அதன் பிறகு சட்டப்பேரவையில் தமிழக முதமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஆட்சி நலன் கருதி மேலும் இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என்று அறிவித்தார்.

முதலமைச்சர் பேசியதாவது விதி எண் 110 விதி படி இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என அறிவித்தார். அவை நெல்லையிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகயும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகயும் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த செய்தியை படிக்க : தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உதயமாகிறது! எந்த மாவட்டம் தெரியுமா?

இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தற்போதைய ராஜ சபா MP யும் ஆன திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சட்டப்பேரவையில் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்றார்.

மேலும் அவர் பேசியதாவது மக்களின் எண்ணிக்கையும் அதன் பரப்பளவும் அதன் வளர்ச்சியும் பொறுத்து அப்பகுதியை முன்னேற்ற இது போல தனி மாவட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். தற்போது அந்த வகையில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டமாக உதயமாக உள்ளது.இப்படி தனி தனியாக பிரிபதர்க்கு பதிலாக மக்கள் தொகை அடர்த்தி கணக்கில் கொண்டு அவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உடனடியாக 60 மாவட்டங்களாக பிரிக்கப் படவேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் பெரிய மாவட்டங்களைப் பிரித்து மொத்தம் 60 மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உதயமாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் பெரியவையாகவே உள்ளன.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K