அடுத்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

0
95

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 1-முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 13ஆம் தேதி திறக்கப்படயிருக்கிறது. அதனடிப்படையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதியும், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 27ஆம் தேதியும், எதிர்வரும் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆரம்பிக்கவிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் கல்வியாண்டில் 1,6,9,11, உள்ளிட்ட வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வருகின்ற ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விடுபட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 11ஆம் தேதியே ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்ற வருடங்களில் கோடை விடுமுறையின் போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்த நிலையில், எதிர் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலத்திலுள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் தாமதமாகவே ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.