பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழகம்:பொருளாதார நிபுணர்களின் கருத்து

0
66

தேசிய பொருளாதாரா வளர்ச்சியில் தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 3 வருடமாக உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.

2019-2020-ம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சியின் விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.03 ஆக உயர்ந்துள்ளது. இது 2 மடங்கு அதிகமாகும்.பொருளாதார வளர்ச்சியின் விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது.

சமீபத்தில் மத்திய அரசு இறுதியில் 2011-2012-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் (ஜி.எஸ். டி.பி.) கணக்கிடப்பட்டது.ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் தமிழகம் நிலையாக இருக்கிறது.

தமிழக அரசு கடும் நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

2019-2020-ம் நிதியாண்டின் இறுதிக்கட்டத்தில் கொரோனா பரவல் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திவிட்டது .சேவை பிரிவை பொறுத்த அளவில், நிதி சேவைகள் 11.71 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

2.21 சதவீதமாக மிகக்குறைவாக 2018-2019-ம் ஆண்டில் இருந்தது. ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்த அளவில் 2019 ஆண்டில் அதன் வளர்ச்சி 6.69 சதவீதமான நிலையில் இருந்தது. அது தற்போது 7.29 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K