பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

0
73

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரும், முதலமைச்சரும், பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம், நோய்தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தற்காலிக செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உள்ளிட்ட நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு மதிப்பெண், கல்வி உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து மதிப்பெண் வழங்கப்பட்டு நோய்த்தொற்று காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்படஇருக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 7297 பணியிடங்களும் நியமிக்கப்பட்ட பிறகு வெளிப்படையாக ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இந்த தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விபரம் இட ஒதுக்கீட்டிற்கு பாதகம் எதுவும் ஏற்படாமல் நியமிக்கப்பட்ட பிறகு பட்டியல் வெளியிடப்படும் என கூறியிருக்கிறார்.

புதிய வகை நோய்த்தொற்றை பொருத்தவரையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகளிலிருந்து வருபவர்களை விட மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் தான் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் s-drop வகை பாதிப்பு இருப்பவர்கள் எண்ணிக்கை 28லிருந்து 33 ஆக அதிகரித்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கவனமாக இருக்க வேண்டும், பொது இடங்களில் முகக்கவசம் போடுவது கட்டாயம் என தெரிவித்து இருக்கிறோம்.

ஒரு சில நாடுகளில் கட்டாயப்படுத்துகிறார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய எந்தவிதமான அவசியமும் இல்லை. மனசாட்சிக்கு பயந்து அவர்களாகவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும். அது நம்மையும், மற்றவர்களையும், பாதுகாக்கும். புதிய வகை நோய்த்தொற்றின் அச்சம் காரணமாக, முற்றிலுமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார்.