சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
56

சென்னையில் இருக்கின்ற கிண்டி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் தரப்பிலிருந்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அதாவது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது அவ்வாறு வைக்கப்பட்ட கோரிக்கை ஒரு வார காலம் நிறைவடைந்துவிட்டது. செங்கல்பட்டு தடுப்பு மையம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கு பதில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பிரதமர் அறிவித்த இலவச தடுப்பூசிகள் தொடர்பான அறிவிப்பிற்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவித்திருக்கிறார். குன்னூரில் இருக்கின்ற தடுப்பூசி மையத்தினை நாங்கள் ஆய்வு செய்து இருக்கின்றோம். பேஸ்டியர் தடுப்பூசி மையம் கடந்த 1980 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கே சுமார் 300க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு மாதத்திற்கு சுமார் ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற வகையில் தயாரித்து தருவதற்கு இயலும் என்று அங்கே இருக்கின்ற பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நோய்த்தொற்று தடுப்பூசிகள் கிடைத்துவிட்டால் மத்திய அரசு அதனை குன்னூர் தடுப்பூசி மையத்திற்கு வழங்கினால் அவர்கள் தயாரித்து கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

நேற்றைய தினம் பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய சமயத்தில் இந்தியாவில் ஏழு நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி நடைபெறுவதாக தெரிவித்திருக்கிறார். எட்டாவது தடுப்பூசி தயாரிப்பு மையமாக குன்னூர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்.