இந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைகிறது! சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த பரபரப்பு பேட்டி!

0
64

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நாமக்கல் மாவட்ட சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த தினங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 608 பேருக்கு இந்த நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணம் பெற்றோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் வேகமாக நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெற்று வருகிறது. மாவட்டத்தின் எல்லாத்துறைகளிலும் நோய்த் தொற்று பாதிப்பு பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகளுக்கு என பிரத்தியேகமான சிகிச்சை மையம் ஏற்பாடு செய்து இன்று அந்த சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான நோய்த்தொற்று சிகிச்சை மையம் திறப்பதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 938 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கருப்பு பூஞ்சை 30,000 மருந்துகளை சேர்த்து மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மூவாயிரம் ,மருந்துகள் தற்சமயம் தமிழகத்திற்கு வருகை தந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கிறார்.