இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!

0
123

தொழில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அங்குள்ள தொழிற்சாலைகளையும் தொழில்துறை திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 2020-21ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 15.7 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் 38,837 தொழிற்சாலைகள் இருப்பதாகவும் அதனை தொடர்ந்து 28,479 தொழிற்சாலைகளுடன் குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் 25,610 மூன்றாவது இடத்திலும், 16,924 தொழிற்சாலைகளுடன் ஆந்திரா நான்காவது இடத்திலும், 16,184 தொழிற்சலைகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

2030 ம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியின் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்தது குறிப்பிட தக்கது.