அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

0
92

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் இனி காலையும் சிறப்பு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதிய சத்துணவு திட்டம் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இப்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு காலை சிற்றுண்டி அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாரத்தின் 5 கிழமைகளுக்கும் வெவ்வேறு வகையான உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளனர். அதற்கான பட்டியல் தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

  • திங்கள் கிழமை– அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
  • செவ்வாய்க் கிழமை – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி
  • புதன் கிழமை – வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
  • வியாழக் கிழமை – உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்,
  • வெள்ளிக் கிழமை – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி