அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

0
153

சிதம்பரத்தில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென்று அண்ணாமலை பங்கேற்காமல் போனது கட்சியினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலராது என்று தெரிவித்து என் கூட இருக்க வந்தவர்கள் இடையில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியான அதிமுகவை விடவும் பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

 

இதன் காரணமாக திமுகவைச் சார்ந்தவர்களே பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பாஜக தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல ஜெயலலிதாவின் பாணியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி வருகிறார் அண்ணா மலை.

இந்த சூழ்நிலையில்தான் சிதம்பரத்தில் பாஜகவின் சார்பாக பொதுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெறுவதாக இருந்தது இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென்று அவர் பங்கேற்காமல் போனது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை.

இது குறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்ட கட்சி தொண்டர்கள் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலகுறைவு காரணமாக, என்னால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

ஆகவே அதற்காக கட்சித் தொண்டர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் தாங்கள் அனைவரையும் சந்திக்க நான் ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இவருடைய பதிவு பாஜகவில் தொண்டர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.