சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

0
82

காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரிய பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஜேபி தரப்பில் பதில் வந்துள்ளது பிஜேபி காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினார். பின்னர் சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநில தனி அந்தஸ்து நீக்கப்பட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்து பேசினார்.

காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது பற்றி பேசும் போது, பிஜேபி செய்தது இது ஜனநாயக படுகொலை எனவும் ஆனால், காங்கிரஸ் தான் முதன்மை குற்றவாளி என கூறினார். காஷ்மீரை பாதுகாக்க கார்கில் போரில் தமிழக இளைஞர்கள் பலர் பங்கு பெற்று பலர் உயிர் தியாகம் செய்து காஷ்மீரை பாதுகாத்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்படும் பொழுது காங்கிரஸ் 12 உறுப்பினர்கள் எங்கே சென்றனர். பிஜேபி உடன் விலை போய்விட்டார்களா? என கேள்வி எழுப்பி காங்கிரஸ் கட்சி தான் முதல் குற்றவாளி என கூறினார். இதனால் கோவம் அடைந்த காங்கிரஸ் பதிலடியாக கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பேசும் பொழுது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தி இழந்து பேசுகிறார். காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசை குறை சொல்வதா? இது முட்டால் தனம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி கட்சியின் உதவியில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு காங்கிரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.
இதற்கு பதிலடயாக திரு வைகோ அவர்கள் பேசும் பொழுது, நான் காங்கிரசின் தயவில் தேர்ந்தெடுக்க வில்லை என தெரிவித்தார்.

நான் திமுக தலைவர் ஸ்டாலின் உதவியுடன் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். காங்கிரஸ் தயவில் இல்லை. இனி எப்போதும் காங்கிரஸ் உதவிவுடன் பொறுப்பு ஏற்க்கமாட்டென் எனவும் தெரிவித்தார். இலங்கையில் ஈழ மக்களை அழித்த இன துரோகிதான் காங்கிரஸ் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதை பற்றி பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் காங்கிரஸ் கட்சி கூறுவதை ஏற்று கொள்கிறேன். கூட்டணி கட்சியின் உதவி உடன் உறுப்பினராக பதவி ஏற்று பின்பு கூட்டணி கட்சியை விமர்சிக்கும் வைகோவின் கூற்று தவறு. வைகோ கட்சி மாறி பேசுவது புதிதல்ல. கூட்டணியில் இருக்கும் போதே விமர்சிக்கவில்லை பதவி கிடைத்த உடன் விமர்சிப்பது வைகோவின் நிலைப்பாட்டை உறுதி படுத்துகிறது என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K