அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை! தமிழ்நாடு முழுவதும் 5000 பகுதிகளில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!

0
79

தமிழ்நாடு முழுவதும் 1200 பகுதிகளில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 பகுதிகளில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

அரசியல் சாசன தினத்தை ஒட்டி அந்த நாளை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் விதத்தில் 12 இருசக்கர வாகன பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து தமிழகத்திற்கு திரும்பி வந்ததை கொண்டாடும் விதத்தில் சென்னை எழும்பூரில் இருக்கின்ற தனியார் பள்ளி அரங்கில் ஒரு விழா நடைபெற்றது.

இந்த பயணத்தில் 15 நாட்களில் 6000 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து, 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை பற்றி எடுத்துரைத்ததை கொண்டாடும் விழா நடந்தது.

இந்த விழாவில் பங்கேற்றுக் கொண்ட தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இந்த விழா முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அதில் திமுகவைச் சார்ந்த ஆர் எஸ் பாரதி போன்ற சிலர் அறிவாலயத்தின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது தான், கோபாலபுரத்து குடும்பம் தங்களுக்கு பிச்சை போடுவார்கள் என காலம், காலமாக தலைமுறை தலைமுறையாக ஆர் எஸ் பாரதி போன்ற மூவர் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் குறைத்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணா மலை.

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை முன்னெடுக்க அதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்பயணம் என்று சொல்வதை விடவும் எல்லா தரப்பு மக்களையும் நான் நேரடியாக சந்திக்க இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள எல்லா சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் செல்ல வேண்டும். முடிந்தால் கிராமம், கிராமமாக செல்ல வேண்டும்.

1 ஆண்டு முழுவதும் இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என இதற்கான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம். மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 1200 இடங்களில் போராட்டம் நடந்தது.

தமிழகம் முழுதும் அடுத்த முறை தமிழக அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.