தமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்?

0
71

இந்திய நாட்டில் நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் இந்தியா முழுவதும் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகின்றது இதனால் பொது மக்களுக்கு நுரையீரல் சம்மந்தமாக பல நோய்கள் ஏற்படுகின்றன.

இதனால் புகை மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியும் அதை ஊக்குவிக்கும் விதமாக பேட்டரி வாகனங்களுக்கு மானியமும் அளித்து வருகிறது. மேலும் பேட்டரி வாகனங்களுக்கு ‘சார்ஜிங்’ செய்வதற்கான மையங்களையும் அமைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது 62 நகரங்களில் பேட்டரி வானங்களுக்கான 2,600 க்கும் அதிகமான ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் 256 சார்ஜிங் மையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்று குறிப்பிட்டார்.

author avatar
CineDesk