வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

0
87

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற பதவி காலம் ஆனது இந்த ஆண்டு முடிவடைய இருக்கின்ற நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முற்றுப்பெறுகிறது. அதற்குள்ளாக தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை கொரோனா காலத்தில் கூட நடந்து இருக்கும் காரணத்தால், இந்ததேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.

இந்த நிலையிலே, தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் தொடக்கம் முதல் இறுதி வரையில், அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், அந்த சமயத்தில் தேர்தலை தவிர்க்க வேண்டும். என அரசு அதிகாரிகளும் தேர்தல் பணியாளர்களும், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை வைத்திருப்பதை தொடர்ந்து தேர்தலை ஏப்ரல் மாதமே நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில், ஏப்ரல் மாதம் 7, 10, 12, 16, போன்ற தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கின்ற தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, மற்றும் ,பாண்டிச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையானது 24ஆம் தேதி நடைபெறும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது தேர்தல் ஆணையம் குறித்து இருக்கும் இந்த தேதிக்கு அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவிக்கும் ஆனால் தேதிகள் மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி தேர்வுகளை கருத்தில் கொண்டு அதற்கு சிக்கல்கள் ஏற்படாதவாறு தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது . மே மாதம் 24ஆம் தேதி வரை தமிழக சட்டமன்ற ஆயுள் காலம் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன்காரணமாக. தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டன.