தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

0
157
#image_title

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!

டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் தொடங்கும் தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 8 அணிகள் விளையாடி வருகின்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 25 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சேலம், கோவை, நெல்லை ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு போல சென்னை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் டி.என்.பி.எல் லீக் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 12ம் தேதி தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூன் 30அம் தேதி வரை கோவையிலும், ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதல் தகுதிச் சுற்று ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெறவுள்ளது. ஜூலை 10ம் தேதி நெல்லையில் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. ஜூலை 12ம் தேதி நெல்லையில் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐ.பி.எல் போலவே இம்பேக்ட் பிளேயர் விதிமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதே போல் டீ.ஆர்.எஸ் முறையும் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் ஐ.பி.எல் போல வைடு மற்றும் நோ பால்களுக்கு அப்பீல் செய்ய முடியாது என்று தகவல் கிடைத்துள்ளது.