ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் போராட்டம் – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு!!

0
157
#image_title

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் புதுச்சேரிக்கு வந்து போராட்டம் நடத்துவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் குறித்த அறிமுகக் கூட்டம் தனியார் உணவகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 2 மணி நேர வேலை சலுகை திட்டம் பெண்களுக்கு பயனளிக்ககூடியது. இதனை விமர்சித்து யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த சலுகையை திரும்ப பெற முடியாது என்றும், எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையிலையே சிலர் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஜிப்மர் மருத்துமனைக்கு வரக்கூடிய ஏழை எளிய மக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்க வில்லை, தமிழகத்தில் வேலை இல்லை என்பதற்காக தமிழக எம்.பிக்கள் புதுச்சேரிக்கு வந்து போராடி வருவதாகவும், அவர்கள் அவர்களுடைய தொகுதியை முதலில் பார்க்க வேண்டும், விளம்பரத்திற்காக புதுச்சேரியில் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

author avatar
Savitha