தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

0
134
#image_title

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக அந்த துறையின் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்.

இந்த கூட்ட தொடரில் மிக முக்கிய மாக பார்க்கப்பட்டது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகாவின் எதிர் கட்சி துணை தலைவர் இருக்கைக்கு, எடப்பாடி அணியும், பன்னீர் செல்வம் அணியும் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது தான்.

மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் திமுக உறுப்பினர்களை சபாநாயகர் அப்பாவு கடுமையாக எச்சரித்தது, எதிர் கட்சி தலைவர் பேசும் போது நேரடி ஒளிபரப்பை ரத்து செய்தது, உள்ளிட்ட பிரச்சினைகளும் அடங்கும்.

இதனிடையே சில சிறப்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர்கள் காரம் சாரமாக பதில் அளித்ததும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதன் முறையாக தமிழக விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்று சட்டமன்ற கூட்டத் தொடரில் தனது துறை சம்பந்தமான அறிவிப்புகளை வெளியிட்டு தனது கன்னி பேச்சை பேசினார் உதயநிதி.

இது போன்ற பல சுவாரஸ்யமான நடப்புகளுடன் நடந்து வந்த சட்டமன்ற கூட்ட தொடர் இன்றுடன் நிறைவடைவதாகவும், மறு சட்டமன்ற கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கூறி, சபாநாயகர் அப்பாவு சட்ட மன்ற கூட்ட தொடரை நிறைவு செய்வதாக கூறினார்.