தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

0
170
#image_title

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் நிறைவுபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காவல் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அத்துறையை வகித்து வரும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 3 நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான்.

மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சாதிச் சண்டை பூசல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. காவல்நிலைய மரணங்களை தடுப்பதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது காவல்நிலைய மரணங்கள் குறைந்துவிட்டது.

கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதாது. மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக களஆய்வில் முதல்- அமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கினோம். ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கோடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுகளில் முரண்பாடு, ஏன் இந்த தடுமாற்றம். கோடநாடு கொலை, கொள்ளையை அப்போதய முதலமைச்சரே மறைக்க முற்படும்போது திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும். சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும் என சட்டமன்றத்தில் கூறினார்.