கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!

0
107

தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் பெற்று உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பானது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்களும் வருகின்ற திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை, மக்களிடம் – “இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்க்கு, மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளது. மேலும் மரபியல் மாற்றம் பெற்ற இந்த புதிய வகை கொரோனா வைரஸ்க்கு, ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கையாக நாம் மேற்கொண்ட முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளி என்று அனைத்தையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமாம்.

மேலும் கொரோனா தடுப்பூசிகளும், தடுப்பு நடவடிக்கைகளுமே போதுமானதாக இருக்கும் என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் ஆர்டிபிசிஆர் என்கின்ற பரிசோதனையில் நெகட்டிவ் என்ற சான்றிதழைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவர். இந்த சான்றிதழை நான்கு நாட்கள் முன்னதாகவே அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் மரபியல் மாற்றம் பெற்ற இந்த கொரோனா வைரஸ் 17 முறை மரபியல் ரீதியான மாற்றத்தை  பெற்று உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மரபியல் மாற்றம் பெற்றுள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ்க்கு மக்கள் அச்சப்பட தேவையில்லை, இதுபோன்று மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Parthipan K