தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

0
158
#image_title

பைக் வாடகை, டாக்ஸியை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பாக சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரேபிடோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றச்சாட்டு.

ராபிடோ, உபர், ஓலா போன்ற நிறுவனங்களில் பைக் டாக்ஸி என சொல்லப்படும் இருசக்கர வாகனங்களை பயணிகள் வாடகைக்கு பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் உள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அண்ணா சாலை தரப்பூர் டவர் அருகே ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பைக் டாக்ஸியை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் கோஷங்களை எழுப்பினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகி சம்பத் கூறுகையில்,

மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தாத எந்த ஒரு வாகனமும் வாடகைக்கு பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறி சொந்த பயன்பாட்டிற்காக இரு சக்கர வாகனம் வாங்கியவர்கள் ராப்பிடோ ஓலா உபர் போன்ற நிறுவனங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு பயணிகளை ஏற்றி வாடகை வசூல் செய்வது சட்ட விரோத செயலாகும்.

மோட்டார் வாகன சட்டத்திலேயே குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அம்சத்தை அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது கண்டனத்திற்குரியது. குறிப்பாக ராபிடோ நிறுவனத்துடன் அண்மையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது முற்றிலும் தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.

author avatar
Savitha