தமிழக அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்! பன்னீர்செல்வம் வைத்த முக்கிய கோரிக்கை!

0
70

தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற நோய் நோய் தொற்றை கட்டுப்படுத்தவும் ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதோடு தமிழகத்தின் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதத்தில் புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குமாறு அதிமுக சார்பாக திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.

சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க தேவை இல்லை எனவும், எல்லாம் கட்டுப்பாட்டிலிருக்கிறது எனவும் கூறியிருந்தார். ஆனாலும் கூட கள நிலைமை வேறு விதமாகத்தான் உள்ளது. ப்ளூ காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது எனவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்திலும் ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டுவரும் விதத்திலும் எதார்த்தமான கள நிலவரத்திற்கு ஏற்றவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.