மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் 

0
204
#image_title

மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள்

விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிது, புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பெண்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருமண மண்டபங்களில் ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அரங்கத்துக்குள் மதுபானக் கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதுபோல விளையாட்டு மைதானங்களில் மதுபான பரிமாற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மதுவிலக்கு துறை துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதி வழங்கலாம், சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

கட்டண விவரங்கள் அரசிதழில் வெளியிட்டு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று மதுவிலக்குத்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சட்டமன்றத்தில் கூறியிருந்த நிலையில், விளையாட்டு மைதானங்களிலும்  திருமணம் மண்டபங்களிலும் மதுபானங்கள் பரிமாற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

author avatar
Savitha