ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

0
66

சென்னை மெரினா பீச்சில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பராமரிப்பு காரணம் என்று தெரிவித்து அந்த நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது விடுதலையானதை தொடர்ந்து அவர் தமிழகம் வந்தால் உடனடியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த நினைவிடத்திற்கு செல்வதற்கு தற்காலிக தடை போடப்பட்டிருக்கிறது.

அதோடு வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரவிருக்கிறது எப்படிப் பார்த்தாலும் அன்றைய தினம் அவருடைய நினைவிடத்தை அதிமுகவினர் தெரிந்து தானே ஆக வேண்டும் என சசிகலா யூகித்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதன் காரணமாக வரும் 24ஆம் தேதி சசிகலா சென்னை வர திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி அன்றையதினம் சசிகலா சென்னை வருவாரேயானால் அந்த சமயத்தில் இந்த விஷயத்தை தமிழக அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பதை தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.