தமிழக நிதிநிலை அறிக்கை! முக்கிய அம்சங்கள்!

0
80

இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில பக்கங்களை வாசித்தார் அதனை இங்கே காணலாம்.

அதாவது தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழக நிதிநிலை அறிக்கையை தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கின்றார். அதோடு தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற அன்றைய தினமே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினார் என்றும் தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

அவ்வாறு அவர் நிதி நிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த போதே பல்வேறு காரணங்களை தெரிவித்து எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட சூழ்நிலையில், திடீரென்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தார்கள்.

அதைத்தொடர்ந்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களின் முழக்கம் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் சார்பாக அறிவிப்பு வெளியானது. 8 வருடத்திற்கு பிறகு தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் 10,01,883 மனுக்கள் இதுவரையில் பெறப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை தமிழக அரசின் இலக்கு என்று தெரிவித்திருக்கிறார்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை காரணமாக, இந்த வருடத்தில் 20,000 கோடி ரூபாய் இழப்பீட்டை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் தமிழ்மொழியின் துணை ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அகரமுதலி உருவாக்கும் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்களின் பழமையை பறைசாற்றும் விதமாக கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார் .தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஒன்றாக இணைத்து 21 மொழிகளில் தொகுப்பு அச்சிடப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பெரியாரின் எழுத்துக்களை எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதற்காக பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அரசுக்கு சொந்தமான நிலங்களில் நில அளவை பணிகளை மிகவும் எளிதாக மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

நவீன முறையில் நில அளவை பணிகளை முன்னெடுக்க ரோபர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு 7,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர் .

இயற்க்கை பேரிடரை வருவதற்கு முன்பாகவே அறிந்துகொண்டு அறிவிக்க புதிய தொழில்நுட்பங்களுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நீர் வழங்கும் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 3384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாசன வசதி அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். அணைகளை சீரமைக்கும் திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு 64 பெரிய அணைகளை புறனமைக்கும் திட்டத்திற்காக தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

கால்நடை பராமரிப்புத்துறைகாக 1 ,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது தாவரவியல் போன்ற அமைப்பதற்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதுமுள்ள பழமையான அரச கட்டிடங்களை புராணமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் துறைக்காக 149 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு36, 785 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உயர்கல்வித் துறைக்காக 5568 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.