தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!

0
79

தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது தனது சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை இது என்று கூறப்படுகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் மாநில வருவாயை இரட்டிப்பாக்குவது தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது வேலை வாய்ப்பை அதிகரிப்பது வணிகத் துறை மருத்துவத் துறை கல்வித் துறை போன்ற பல்வேறு துறைகளின் மேம்பாடு குறித்த அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இன்னும் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.