தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0
56

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த தேர்தலின் போது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என ஒவ்வொரு பகுதியையும் வித்தியாசபடுத்தி காட்டும் வகையில் 4 விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

ஜனவரி 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியோர் வாக்கு சீட்டு எண்ணிக்கையின் அடிப்படையின் மூலம் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன் பிறகு ஜனவரி 11-ஆம் தேதி நடைப்பெற்ற மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்த உள்ள மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தற்போது தமிழக தேர்தல் ஆணைய அறிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சிகளின் தேர்தல்கள் முடிந்தும் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது.9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறதகாவும் கூறப்பட்டுள்ளது .

 

author avatar
Parthipan K