தமிழக கல்வித்துறை – அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு!

0
61

தமிழக கல்வித்துறை – அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் கூட ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

மார்ச் மாதம் கொரோனா விடுமுறை விடும்போது மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம் போல ஜூன் மாதத்திலாவது பள்ளிகள் திறக்கப்படும் என்றே நம்பி இருந்தனர். ஆனால் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை என்பதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

தற்போது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்க்கு விண்ணப்ப படிவங்கள் வழங்குதல் மற்றும் சேர்க்கையும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், மதிப்பெண் பட்டியல் வந்த பின்னர் சேர்க்கைக்கான தே‌தி அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேற்கண்ட விண்ணப்பங்கள் வாங்க பள்ளிகளில் கூட்டம் சேராது சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒத்துழைக்குமாறும் பொது மக்களை கேட்டுக்கொள்ளப் படுவதாகவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K