2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

0
94

ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தும் தமிழகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் சாசன விதிகள் தொடர்புடைய மனுக்கள் என்பதால் 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், கிருஷி கேஷ் ராய் மற்றும் சி ரவிக்குமார் அடங்கிய அரசியல் சாசன அமைப்பில் நடைபெற உள்ளது.

விலங்குகளை முன்னிலைப்படுத்தும் விளையாட்டு விலங்குகள் வரை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? ஜல்லிக்கட்டு சக்கடி விளையாட்டுகளை நடத்த தமிழகமும், மகாராஷ்டிராவும் கொண்டு வந்துள்ள சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதா? தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டுச் சட்டம் கலாச்சார விதிகளின் கீழ் பாதுகாப்பு பெறுகிறதா? பாரம்பரிய நாட்டு மாடு இனங்களின் வளர்ச்சிக்கு ஜல்லிக்கட்டு உதவுகிறதா? என்பது போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அரசியல் சாசன அமர்வு விரிவான விசாரணையை நடத்த இருக்கிறது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிணைந்த விளையாட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற 5 வகையான நாட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஐநா சபையின் கீழ் செயல்படும், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவுகள் அடிப்படையில், ஜல்லிக்கட்டுக்கு பிறகு காங்கேயம் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், நாட்டு இன மாடுகளை வளர்க்கும் ஆர்வம் குறைந்துவிடும் எனவும் தமிழக அரசு தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு மற்றும் விலங்குகள் வகை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தடையை விதைக்க கூடாது ஒன்றாமை வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த மக்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறது.

விதிகள் 14 மற்றும் 21 மற்றும் விகிதாச்சார கோட்பாட்டின் அடிப்படையில் விலங்குகளுக்கு ஏதாவது தீங்கு விளைவிப்பதை தடுக்கும் விதத்தில், குறுகிய வரம்புகள் இருக்க வேண்டும். அதனடிப்படையில் முழுமையான பாதுகாப்புகள், கண்காணிப்புகள் கீழ் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனப் பிரிவு 21ன் படி விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை தனி உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் ஆகவே விலங்குகளின் உரிமையை கருதி மனிதர்களின் உரிமையை பறிக்க கூடாது. மேலும் ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று உத்தரவு பிறப்பித்து மற்ற மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களின் கோரிக்கை என்பது ஒரே முகமாகத் தான் இருக்கிறது. அதாவது தமிழர்களின் உணர்வுடன் கலந்த ஒரு கலாச்சார விளையாட்டை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இந்த பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாபெரும் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். என்ற கருத்து எந்த அளவிற்கு ஆணித்தனமாக இருந்ததோ, அதே அளவிற்கு பீட்டா அமைப்பை குறைந்த பட்சம் தமிழகத்தில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலித்தது.

அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியதால் பீட்டா அமைப்பிற்கான எதிர்ப்பு சற்றே குறைந்திருந்தது. ஆனால் இப்படி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடத்த விடாமல் ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும் அந்த அமைப்பிற்கு எதிராக பொதுமக்கள் முதல் இளைஞர்கள் வரையில் அனைவரும் தற்போது கொதித்து எழுந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் இந்த ஜல்லிக்கட்டை ஒருபுறம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திறமையாக வாதாடி காப்பாற்றி தமிழர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதுடன், பீட்டா என்ற அமைப்பை தடை செய்வதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.