ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு!

0
81

ஜல்லிக்கட்டு கம்பாலா போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்ஜ்தோகி போன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமைப்பில் கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து பீட்டா அமைப்பின் சார்பாக சில புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

அந்தப் புகைப்படங்களை பார்த்த பிறகு பீட்டா அமைப்பு வழங்கிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளையும் மீறுவதாக இல்லை என்று தெரிவித்து புகைப்படங்களை பிரமாண பத்திரமாக சரியான முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.