தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
67

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1ஆம் தேதி கேரளாவில் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 29ஆம் தேதியே அதாவது நேற்றைய தினமே ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கத்தை விடவும் 3 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தாலும் நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பான அளவாகவே இருக்கும் என்று கணிப்பை வெளியிட்டிருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

அதனடிப்படையில் நீண்டகால சராசரி மழை அளவில் 90 சதவீதம் முதல் 34 சதவீதம் வரையில் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வருடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையின் மூலமாக 39.34 சென்டிமீட்டர் மழை கிடைத்திருக்கிறது. இது இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகும். இந்த சூழ்நிலையில், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் இயல்பான மழையே காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நெல்லை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, போன்ற மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.