தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

0
133

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்துள்ளது.

அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடலில் சில முக்கிய உறுப்புகள் செயல்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தற்போது நேற்று இரவு 11:15 மணி அளவில் அமைச்சர்  துரைக்கண்ணு காலமானார். 

தகவலறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உள்பட மற்ற அமைச்சர்களும் மருத்துவமனைக்கு உடனடியாக வந்தனர். வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல் ஆம்புலன்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகே துரைக்கண்ணு அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியதாவது : “வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு  அவர்களின் இறப்பு, அதிமுக கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் தனக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அதிமுக கட்சிக்கு இது ஈடு செய்ய முடியாத அளவிற்கு பெரிய இழப்பாகும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Parthipan K