நீண்ட இழுபறிக்குப்பின் ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

0
64

தமிழ்வழி இடஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க பட்டிருக்கின்றது

திமுக ஆட்சியில் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது இதன் காரணமாக தமிழ் வழியில் படித்த பலநூறு மாணவர்களுக்கு அரசு பணிகளிலும் முன்னுரிமை கிடைத்தது ஆனாலும் ஆங்கிலவழிக்கல்வியில் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு வேலைக்காக பட்டப்படிப்பை தமிழில் தமிழில் பயின்றதாக கூறியதால் சர்ச்சைகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நிச்சயமாக 10 மட்டும் பன்னிரண்டாம் வகுப்புகளிலும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் தமிழிலேயே கல்வி கற்று இருந்தால் மட்டுமே அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு பயனளிக்கும் என்று கடந்த மார்ச் மாதம் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது சட்டசபையில் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது.

ஆனாலும் சுமார் 8 மாதங்கள் ஆன பின்பும் தமிழக ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்வழி படிப்பு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் போன்றே தமிழ்வழி இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வி எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு பின்னரே ஒப்புதல் வழங்கியிருக்கின்றார் ஆளுநர்.

இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாவது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவிற்கு சுமார் 8 மாத காலமாக ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்துவது ஏன் என இரு நாட்களுக்கு முன்பே கேட்டேன் ஆளுநர் அனுமதி வழங்கியதாக செய்தி கிடைத்திருக்கின்றது அதற்கு நன்றி 8 மாத காலமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்கு கண்டங்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.