அனைவரும் கவனமுடன் இருங்கள்! தொண்டர்களுக்கு ஆர்எஸ்எஸ் வழங்கிய அறிவுரை!

0
82

தமிழகத்தில் இதுவரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், பாஜகவிற்கும் எதிரான மனநிலையே இருந்து வந்தது.

இந்த இரு அமைப்புகளுக்கும் எதிரான மனநிலை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய அதிமுகவின் காலகட்டத்தில் கூட மாறவில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவின் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறோம், ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கிறோம் என்று சொல்லி வந்த திமுகவின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலை மாறியுள்ளது.

முன்பு எப்போதும் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் பெயர் கூட தமிழகத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் திடீரென்று சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனையை எதிர்க்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதனை செய்த மர்ம நபர்கள் யார் என்று இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருக்கின்ற பி எஃப் ஐ நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 22 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு போன்ற அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இது குறித்து ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வீட்டிலிருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபர்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது, பிஎப் ஐ அமைப்புகளில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தொடர்பான விபரங்கள் அவர்களுடைய வீடு, அலுவலக வரைபடங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகவே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.