இனிமே இதை வாங்கும் பொழுது இதை கவனிங்க! 9 பேர் பலியான சம்பவம்!

0
53

சீனாவில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள வீட்டில் ஒரு வருடமாக ஃப்ரிட்ஜில் நூடுல்ஸ் வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்டிருந்த அந்த நூடுல்சை எடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சமைத்த சாப்பிட்டுள்ளனர். திடீரென உடல்நலக்குறைவு காரணமாக 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவ அறிவிப்பில் இரைப்பையில் சோள மாவினால் செய்யப்பட்ட நூடுல்ஸ் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த விஷமாக இருந்தது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

போங்க்ரெக்கிக் என்ற அமிலத்தால் நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொள்வது மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.

சம்பவத்தன்று, அந்த நூடுல்சை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட தொடங்கி வயிற்று வலி ஏற்பட்டு 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும். எனவே நாம் இந்த மாதிரியான பாக்கெட்களில் உள்ள உணவு பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும். இந்திய உணவுகள் மிகவும் மருத்துவ தன்மை கொண்டது. அதனை குழந்தைகளுக்கு பழக்க படுத்துங்கள்.காலாவதியாகி விட்டதா ? என்பதை கவனமாக பாருங்கள்! அதன் பின் உணவை சமைத்து சாப்பிடுங்கள். ஃப்ரிட்ஜில் உணவை பதபடுத்தி வைத்து சமைத்து உண்ணாதீர்கள்.

author avatar
Kowsalya