டி20 உலகக் கோப்பை..இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.!!

0
73

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

மேலும், மற்ற 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதில் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘எ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த 8 அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நேற்று முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை நடைபெறும். இதில் தகுதி பெறும் 4 அணிகள் அக்டோபர் 23ம் தேதியிலிருந்து நடைபெறும் சூப்பர் 12 போட்டிகளுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகளுக்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது.

அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதவுள்ளது. பின்னர் இதே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.

அதே போல, துபாயில் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றது. பின்னர் இதே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா –
இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன