டி20 உலகக் கோப்பை தொடர்! புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்ற அணி!

0
64

தொடக்க காலத்திலிருந்து தற்போது வரையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் வேறு எந்த அணியுடனும் விளையாடினாலும் இந்திய ரசிகர்கள் இருக்கும் ஆர்வத்தை விட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் இந்திய ரசிகர்களிடையே ஒரு அதீத ஆர்வம் காணப்படும்.

இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் விளையாட்டில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும்போது கூட இந்த அளவிற்கு இந்திய ரசிகர்களிடையே ஆர்வம் இருக்காது. அந்த அளவிற்கு இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் இந்திய ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

ஏனென்றால் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றன. அதனாலேயே இந்திய ரசிகர்கள் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் மட்டும் தனி ஆர்வத்தை செலுத்தி இருப்பார்கள்.

இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதுவரையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 6 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இந்த 6 முறையும் இந்தியா சரித்திர வெற்றியை பதிவு செய்து ஒருமுறைகூட பாகிஸ்தானிடம் தோற்காமல் நிலைத்து நின்று வருகிறது.

இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோல்வியுற செய்தது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதோடு அந்தப் போட்டியில் 3.5 ஓவர்களில் பந்துவீசி சுமார் நாற்பத்தி மூன்று ரன்களை வாரி வழங்கிய இந்திய வீரர் முகமது சமி அவர்களை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகின்றது. தற்சமயம் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன சார்ஜாவில் நேற்றைய தினம் நடந்த குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி உடன் பாகிஸ்தான் அணி சந்தித்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி வீரர்களின் பந்து வீச்சின் மூலமாக நியூசிலாந்து அணியை கணிசமாக கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் அணியில் மிகவும் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ராப் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் 33 ரன்களும் பாபர் அசாம் 9 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள். இதன்பிறகு களம் புகுந்த பகர் ஜமன் 11 ரணிலும், ஹபிஸ்11 ரன்னிலும் மற்றும் வாசிம் பதினொரு ரன்னிலும், அவுட் ஆனார்கள் சோயப் மாலிக் 27 ரன்களும் மற்றும் ஆசிப் அலி 27 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தார்கள்.

அந்த அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் சோதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அதேபோல சாண்ட்னர்,டிம் சவுதி, மற்றும் போல்ட் உள்ளிட்டோர் தல ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோல்வியுற செய்தது, இதன் மூலமாக குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி 2-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.