டோனி தொடர்பாக புதிய தகவலை வெளியிட்ட பிசிசிஐ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
68

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்றவருடம் அறிவித்த மகேந்திர சிங் தோனி தற்சமயம் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றார். சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்காவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நடுவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக நாற்பது வயதை எட்டி இருக்கக்கூடிய தோனி நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், தற்சமயம் அவர் இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார். பயிற்சியின் போது அவருடைய ஆலோசனை இந்திய வீரர்களுக்கு பயன் தரும் விதமாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இரண்டாவது சுற்றில் நேரடியாக களமிறங்கும் இந்திய அணி இரண்டாவது பிரிவில் இருக்கிறது இந்திய அணியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24ஆம் தேதி சந்திக்கின்றது. நியூசிலாந்து அணியுடன் முப்பத்தி ஒன்றாம் தேதி விளையாடுகிறது. அதேபோல ஆப்கானிஸ்தான் அணியுடன் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி விளையாட உள்ளது, தகுதிச்சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளிலும் விளையாட இருக்கிறது இந்திய அணி.

இந்த சூழ்நிலையில், பிசிசிஐ தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற ஒரு பதிவில் கிங் தோனிக்கு அன்பான வரவேற்பை அளிக்கின்றோம், புதிய பணியுடன் இந்திய அணியில் தோனி மறுபடியும் இணைந்து விட்டார் என்று பதிவிட்டு இருக்கிறது. பிசிசிஐயின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

தற்சமயம் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது, அதன் அடிப்படையில் நேற்றைய தினம் இந்தியா தன்னுடைய முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்தித்தது, இதில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.