ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்!

0
84
Swiggy, Somato companies have trouble operating! Food shop owners in grief!
Swiggy, Somato companies have trouble operating! Food shop owners in grief!

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 அலையாக உருமாறி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டின் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவே அதிகபட்ச உட்சகட்ட எண்ணிக்கையாகும்.முதலில் தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு 50%  மட்டுமே அனுமதித்தனர்.

திருமணவிழாவில் கலந்துக்கொள்ளவும்,100 பேருக்கும் இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளித்தனர்.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளனர்.முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வாங்க வேண்டும் என உத்தரவிட்டது.இவ்வாறு பல கட்டுப்பாடுகள் போடப்பட்டும் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக தான் செய்தது.

அந்தவகையில் முதலமைச்சர் இன்று அரசு ஊழியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் மக்கள் நலன் கருதி இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.நாளை மறுநாள்(20/04/2021)  இந்த ஊரடங்கானது அமலுக்கு வருகிறது.இதனையடுத்து வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதில் மீன்,இறைச்சி போன்ற கடைகள் நடத்த தடை செய்துள்ளனர்.குறிப்பிட்ட உணவங்களில் மட்டும் முழு ஊரடங்கின் போது பார்சல் வசதியை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.உணவு கடை உரிமையாளர்களுக்கு அதிக அளவு லாபம் தருவது மக்கள் ஆர்டர் செய்து உணவு வாங்குவதுதான்.தற்போது குறிப்பாக ஸ்விகி,சொமெட்டோ ஆர்டர் நிறுவனங்கள் தடையின்றி  செயல்படும் என கூறியுள்ளனர்.ஆனால் சிறு சிக்கலாக,அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுனர்.