“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்

0
80

“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்று அசத்தி சூர்யகுமார் யாதவ்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா  மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் வானவேடிக்கைக் காட்டி 36 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் போட்டியின் ஆட்டநாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய அவர் “காலநிலைமாற்றம் மற்றும் அதிக பயணத்தால் எனக்கு போட்டி அன்று காலை வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் நான் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் நான் என் அணி மருத்துவரிடம் எதையாவது செய்யுங்கள், என்ன மருந்து வேண்டுமானாலும் கொடுங்கள் என்னை விளையாட வையுங்கள். இந்த போட்டியை உலகக்கோப்பையின் இறுதி போட்டி போல நினைத்துக்கொண்டு நான் விளையாடுவதில் உறுதியாக இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.