இரண்டே நாளில் முதலிடத்தைத் தவறவிட்ட சூர்யகுமார் யாதவ்… தற்போதைய நிலை?

0
75

இரண்டே நாளில் முதலிடத்தைத் தவறவிட்ட சூர்யகுமார் யாதவ்… தற்போதைய நிலை?

இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தற்போது தனது பார்மின் உச்சத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முதல், ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் வரை சிறப்பான பார்மில் இருந்து அசத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி பாராட்டி இருந்தார். ஆனால் வேறு சில முன்னாள்  வீரர்கள் டிவில்லியர்ஸுடன் அவரை ஒப்பிடும் அள்வுக்கு இன்னும் அவர் சாதனைகள் படைக்கவில்லை என்று கூறி இருந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்கு இடம்பிடித்தார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா எதிரான டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை முந்தி முதல் இடம் பிடித்தார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவரின் புள்ளிகள் 838 ஆக குறைந்து மீண்டும் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளார். பாபர் ஆசம் 854 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளார்.

டி 20 உலகக்கோப்பை தொடரில் இருவரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்தான் முதல் இடத்தை தக்கவைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.