டோனி பற்றி சுரேஷ் ரெய்னா கூறிய அதிர்ச்சி தகவல்

0
66

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு  அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பினார். ரெய்னா விலகியது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கேப்டன் டோனிக்கு தந்ததை போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாகவும், கொரோனா விதிமுறைகள் காரணமாக அறையை உடனே மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் டோனியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார். ‘இது ஒரு தனிப்பட்ட முடிவு, நான் எனது குடும்பத்திற்காக திரும்பி வர வேண்டியிருந்தது. அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியதை, தந்தை திட்டியதுபோன்று உணர்கிறேன். சென்னை அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விரும்புகிறேன்’ என்று ரெய்னா கூறி உள்ளார். தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன், விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என்றும் ரெய்னா கூறினார்.

author avatar
Parthipan K